Wednesday, May 20, 2015

கொத்துரொட்டி -003 (தொழில்நுட்பம்)

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 பற்றி பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும்இந்தப் பதிப்பே விண்டோசின் இறுதிப்பதிப்பு என்பதுடன் இனி அப்டேட்கள் மடடுமே காலத்திற்கு காலம் வரும் எனவும் சொல்லியிருக்கிறார்கள் .இந்நிலையில் தற்போது விண்டோஸ் 10 இயங்குதளமானது ஒரே நேரத்தில் 7 வகையான பதிப்புக்களாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







வெவ்வேறு சாதனங்களை அடிப்படையாகக் கொண்டு Home, Mobile, Pro, Enterprise, Education, Mobile Enterprise மற்றும் IoT எனும் 7 பதிப்புக்களாக இவ் இயங்குதளம் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விண்டோஸ் இயங்குதளம் உள்ள  கணனிகளின் தரவுகளின் பாதுகாப்பிற்கென கடவுச் சொற்களை உருவாக்கும் வசதி ஏற்கனேவே  தரப்பட்டுள்ளமை அறிந்ததே.இக்கடவுச் சொற்கள் இன்றைய கால  தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.அதாவது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் Windows Hello எனும் புதிய கடவுச் சொல் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இது கருவிழி, கைவிரல் அடையாளம் அல்லது முகத்தினை வைத்து   விண்டோஸ் 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணனி அல்லது ஏனைய சாதனங்களினுள் நுழையும் முறையாகக் காணப்படுகின்றது .இன்னும் சில காலங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.





!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இன்றைய கால  கட்டத்தில் இணையம் இல்லை என்றால் தினசரி வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு .உலகமே வந்து விட்டது .ஆனால் 
இணையம் பற்றிய பல சுவாரசியமான  தகவல்கள் பலருக்கும் தெரியாதவை.அவற்றில் சிலவற்றை நான் இங்கு தொகுத்திருக்கிறேன் .

* இன்டர்நெட் பயன்படுத்தும் 2.4 பில்லியன் பயனாளிகளில் 50 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.

* உலகின் முதல் மின்னஞ்சல் 1971 ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் (ray tomlinson) என்பவரால் அனுப்பப்பட்டது.

* தினமும் 250 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 81 சதவீத மின்னஞ்சல் ஸ்பேம் (Spam) ஆகும்.

* உலகின் முதல் ட்வீட்டினை அதன் நிறுவனர் ஜாக் டார்சீ (Jack Dorsey)2006 ஆம் ஆண்டு மார்ச் 21ம் திகதி பதிந்தார். தற்போது தினமும் 1,700 டுவீட்கள் ஒவ்வொரு நொடியிலும் பதியப்படுகின்றன.

* தற்சமயம் 637 மில்லியன் வெப்சைட்களும் (Website), 250 மில்லியன் வலைப்பதிவுகளும்  (Blog) பயன்பாட்டில் இருக்கின்றன.

* ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 4200 புதிய டோமைன் (Domain) பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் எண்ணிக்கை 37 மில்லியனாக இருக்கின்றது.

* பேஸ்புக் தளத்தில் உறுப்பினர் எண்ணிக்கை  1.2 பில்லியனாக தற்சமயம் இருக்கின்றது. பதினேழு வீத  மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.

* இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை “What is”

* GIF format ஸ்டீவ் வில்கே (Steve wilke)என்ற கணனி சேவை பொறியாளரால் 1987ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

“Gangnam Style” என்ற பாடல் யூடியூப்பில் அதிக பேர் பார்த்த வீடியோவாக இருக்கிறது. இதுவரை 2 பில்லியன் பேர் இதை பார்த்துள்ளனர்.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது அன்றோயிட் போன்கள் ஆகும் .இதில் தற்போது வந்துள்ள 
 லிபாப் 5.0 பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் 

கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று பல பதிப்புகள் 
  வந்துவிட்டன.இதில் செய்யப்பட்டிருக்கும்  சில் மேம்பாடுகள் ஆவன 

* உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் (Settings) மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பரிமாறிக்கொள்ளலாம்  

* ஆப் நோட்டிபிகேஷன் (App notification) சென்று எந்த அப்ளிகேஷன்கள் (APP)  உங்களை தொந்தரவு செய்யும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

* ஆப்ஸ் செட்டிங்ஸ்க்கு (App settings) ஏற்ப லொக்  ஸ்கிரீனிலும் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.

* நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடம் போனை வழங்கும் போது  Guest mode பயன்படுத்தலாம்.

* Do not disturb என்ற  Option மூலம் இரவு நேரங்களில் பயனாளிகளை தொந்தரவு செய்யாமல் இருக்க ஆன்டிராய்டு 5.0 அனுமதிக்கின்றது.

* ஸ்மார்ட்வாட்ச் (Smart watch) முதல் ஸ்மார்ட் டிவி (Smart TV) வரை அனைத்து கருவிகளுடனும் புதிய அப்டேட் மூலம் இணைக்க முடியும்.

*தற்போது செய்யப்பட்டுள்ள அப்டேட் மூலம் பேட்டரி பயன்பாடு அதிகமாக கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நீங்கள் காசு கொடுத்து வாங்கும் சில மென்பொருட்களை இலவசமா பெற வேண்டுமா .இந்த தளத்திற்கு செல்லுங்கள் .பெரும்பாலும் நல்ல தரமான மேன்பொருடகளை தருகின்றனர் .அனால் ஒரு மென்பொருள் அந்த நாள் மட்டுமே இலவசம் இன்று Ashampoo Media Sync 1.0.2 எனும் மென் பொருளை இலவசமாக கொடுக்கின்றனர் 

ஒவ்வொரு நாளும் வேறு வேறு மென்பொருட்கள் .தேவைப்பட்டதை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் .உங்கள் மின் அஞ்சலோ வேறு எதுவுமே கொடுக்க தேவை இல்லை .பயன்படுத்துங்கள் .நல்ல தரமான வைரஸ் எதிர்ப்பு மென் பொருளை  உங்கள் கணினியில் வைத்திருங்கள் .வைரஸ் எதிர்ப்பு மென் பொருள் ஒன்றே ஒன்றுதான் உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த வேண்டும் .அனால் மல்வெயர் .அட்வெயர் எதிர்ப்பு மென்பொருட்கள் எத்தனையும் நிறுவி நீங்கள் பயன்படுத்தலாம் .

மீண்டும் சந்திக்கிறேன் .

முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை!


விகடன் தளத்தில்   வாசகர் பக்கம் எனும் பகுதியில் சிவா ( திருத்தணி)  என்னும் வாசகர் எழுதிய ஒரு விடயத்தினை இங்கு பகிர்ந்திருக்கிறேன் .
அனந்த விகடன் மற்றும் வாசகர் சிவா (திருத்தணி) அவர்களுக்கு   எனது நன்றிகள் .

மூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மக்கள் பலரும் சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும், புதுப்புது கோணங்களில் கூறி தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் என் கவனத்திற்கு வந்த வாட்ஸ் அப் மெசேஸ் ஒன்று இது. 

முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட ஒரு வீட்டின் சொந்தக்காரர், சமையல்காரியை அழைத்து தோட் டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை பிடித்து சமைக்கச் சொன்னார்களாம். தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து அடித்து சமைத்த பெண்ணுக்கு அதை சுவைக்க ஆசை ஏற்பட்டதாம். முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து சாப்பிட்டாளாம். மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம். மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள். 

நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது என்று வாதிட்டாளாம் அந்த பெண். வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம். விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு கால்கள்தான். இந்த பெண் எதையோ மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாராம். தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், வழக்கை ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம். 

அந்த பெண் என்ன பண்ணினாரோ? ஏது பண்ணினாரோ? தெரியவில்லை?! விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும் முயலுக்கு மூன்றே காலென்று தவறாக கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம். 

தீர்ப்பைக் கேட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும் சிரிப்போடும், திமிரோடும் ஊர் மக்களைப் பார்த்தா ராம்.

நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம் முழுசாக மறுநாள் தான் மக்களுக்கு தெரிய வந்ததாம்.
தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம் இரண்டு கால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள். எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான். எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம். இப்ப நீங்க சொல்லுங்க!

முயலுக்கு மூன்று கால்களா? நான்கு கால்களா? அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா? அந்த பெண்ணு க்கு தண்டனை தரவேண்டுமா? வேண்டாமா?
குறிப்பு: சமீபத்திய பரபரப்பு தீர்ப்பு ஒன்றுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. 
    
- சிவா ( திருத்தணி) 

Tuesday, May 19, 2015

நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு தப்பிவரும் ஜெயலலிதா: மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குற்றச்சாட்டு!


நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு ஜெயலலிதா குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பதாக மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், ஜெயலலிதா மீது 1996-97 காலக்கட்டத்தில் வழக்குகள் தொடரப்பட்ட போது, அவர் கைதாகி சிறையில் இருந்தபோது அவருக்கு ஜாமீன் பெற்று தந்தவர் ஆவார்.அவர் தற்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.அந்த கட்டுரையில், நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு குற்றங்களில் இருந்து ஜெயலலிதா தப்பித்து இருக்கிறார்.டான்சி வழக்கு, லண்டன் ஹொட்டல் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹொட்டல் வழக்கு, வருமான வரி வழக்கு என அத்தனை வழக்குகளிலும் குறுக்கு வழிகளில் ஜெயலலிதா விடுதலை பெற்றிருக்கிறார்.


தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்தும் தப்பித்து இருக்கிறார். இதற்காக அவர் நீதியை வளைத்த முயற்சிகள் சிறிதல்ல.2003ல் ஓய்வுப் பெறவிருந்த நீதிபதி பாலகிருஷ்ணனை நீதிபதியாக தொடர வைக்க முயற்சித்தார்.2015ல் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.கடந்த ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்த விதம் வியப்புக்குரியது.


கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள கணக்கியல் தவறுகள் திருத்தப்படுமாயின் தீர்ப்பே மாறுபடும்.10% வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வைத்துக்கொள்ளலாம் என கிருஷ்ணானந்து வழக்கை காட்டி ஜெயலலிதாவை விடுவித்திருப்பது சரியல்ல.கிருஷ்ணானந்த் கூடுதலாக வைத்திருந்த பணம் ரூபாய் 11,349 மட்டுமே.


தவறுகள் நிறைந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலே ஜெயலலிதாவின் கூடுதல் வருமானம் ரூபாய் 2,82,36,812.அதன் தற்போதைய மதிப்பு பணவீக்கம் காரணமாக இன்னும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.


கிருஷ்ணானந்த் வழக்கில் கூடுதல் வருமானம் மிக மிக குறைவு என்பதால் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.அந்த வழக்கின் சாராம்சங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் குவித்த ஜெயலலிதாவுக்கு கொஞ்சமும் பொருந்தாது.ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்படக் கூடியவர் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, May 17, 2015

வருங்கால முதல்வரே வருக! வருக !

டிவேலுவின் எலி படத்தின் முன்னோட்டம்  இரு தினங்களுக்கு
முன்னர் இருந்து இணையத்தில் காண முடிகிறது ,இதுவரை 203,644 பேர் பார்த்திருக்கிறார்கள் .வைகைப்புயலே உங்களை வரவேற்கிறேன் .

வடிவேல் செய்த அரசியலில் எனக்கு பிடித்தமில்லை ஆனால் அரசியல்
காரணமாக  ஒரு நல்ல திறமையான  நடிகனை புறக்கணிப்பதிலும் எனக்கு
உடன்பாடு இல்லை ,மேலே உள்ள தலைப்பு சும்மா நகைச்சுவைக்காக
மட்டுமே இதில் எந்த அரசியலும் இல்லை .