Friday, January 02, 2015

எங்கும். எப்போதும் சொல்வோம் நன்றி வணக்கம்!


னடா வந்தபின்பு நான் நிறைய நல்லவிடயங்களை கற்றுக் கொண்டேன் .மற்றவர்களுக்கு கதவை பிடித்திருப்பது ,பெண்களுக்கு மரியாதை தருவது
தொலைபேசியில் பண்பாக கதைப்பது ,நேரம்தவறாமை,மற்றவர்களின்  தனி மனித சுதந்திரத்தை மதிப்பது ,பொறுமையாக வரிசையில்நிற்பது,
எந்தப்பெரிய  கொம்பனாலும் பெயர் சொல்லி அழைப்பது இப்படி பலவற்றை சொல்லலாம் .இதில் ஒன்றுதான் வணக்கம் சொல்லப் பழகியது.
இங்கே இயங்கும் எந்த தமிழ் வானொலி நிலையத்திற்கு அழைத்தாலும் ஹலோ சொல்லமாட்டார்கள் .வணக்கம் என்றுதான் சொல்வார்கள் ,
அழைப்பவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லுவார்கள் இப்படியாக கேட்டுக்கேட்டு உறவினர்கள் நண்பர்கள் தொலைபேசும்போது பலரும் வணக்கம் தான் சொல்வார்கள்  பல தமிழர்களுடைய நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புக்களில் வணக்கம் என்றே தொடங்குவார்கள் .

இன்று பெரும்பாலான புலம்பெயர்ந்த நாடுகளில் இதுவே வழக்கமாகிவிட்டது .மக்களின் வார்த்தைகளில் வணக்கத்தை தவழவிட்ட பெருமை வானொலி அறிவிப்பாளர்களையேசாரும் .அவர்களுக்கு எனது பாராட்டுகள் .உங்களுக்கு தெரியுமா கனடாவில் உள்ள ஒரு இருபத்தினாலு மணிநேர தமிழ் பண்பலை வானொலி நிலையத்தின் பெயர் "வணக்கம் எவ் எம் "பெருமை கொள் தமிழா
என்பது அவர்களது இலச்சினை

மேலை நாடுகளிலும் ,மலேசியா ,சிங்கப்பூர் ,இலங்கை போன்ற நாடுகளிலும் உள்ள வானொலி தொலைக்காட்சிகளின் பெயர்கள் தமிழில் இருக்கும்போது
தாய் தமிழகத்தில் இயங்கும் வானொலி ,தொலைக்காட்சிகளின் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கிலப்பெயர்களாக இருப்பது தமிழர்களுக்கு பெருமை
சேர்ப்பதாக இருக்கிறதா ? இந்தநிலை மாறவேண்டாமா சிந்தியுங்கள் பதிவர்களே...

நான் ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை .ஆங்கிலத்தினை ஆங்கிலமாக கதையுங்கள் ,தமிழை தமிழாக பேசுங்கள் ,இரண்டையும்
கலந்து கட்டி தமிழை கெடுக்காதீர்கள் .

இனி புதிய ஆண்டில் இருந்து ஒரு சபதம் எடுத்துகொள்வோம் தமிழர்களுடன் உரையாடும்போது தமிழில் உரையாடுவோம்
அத்துடன் எங்கும் எப்போதும் நன்றி வணக்கம் சொல்ல பழகிகொள்வோம்.

நன்றி ,கரிகாலன் 

2 comments:

காரிகன் said...

கரிகாலன் சார்,

வணக்கம் என்பது நான் உன்னை வணங்குகிறேன் என்ற அர்த்தம் கொண்டிருப்பதாக எண்ணுகிறேன். அப்படியானால் வணக்கம் சொல்வது அதுவும் இரண்டு கைகள் கூப்பி கும்பிடுவது எல்லாமே நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்ளும் செயலாகாதா? உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறேன். முடிந்தால் பதில் சொல்லவும். இதற்கு ஹலோ என்பது சற்று தேவலை என்பது என் எண்ணம். மேலும் ஹலோ இன்றைய தேதிக்கு ஒரு ஆங்கில வார்த்தையாக பார்க்கப்படுவதில்லை. அது ஒரு உலகம் தழுவிய எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய பொதுவான சொல் என்றே கருதப்படுகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழிலேயே உரையாடுவோம்