Friday, October 12, 2012

உலகின் அதி பயங்கரமான 10 விமான நிலையங்கள்.

விமானப் பயணம் என்பது எல்லோருக்கும் மகிழ்வினை கொடுக்கக்கூடிய ஒரு விடையம் .சிலருக்கு அடிக்கடி  விமானப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் .சிலருக்கோ விமானப்பயணம் என்பது வாழ்வில் ஒரு முறையாவது கிடைக்கவேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்,

எது எப்படி இருந்தாலும் விமானப்பயணம் செய்பவர்களுக்கு தெரியும் அது ஒரு இனிய அனுபவம் .என்று ,அதற்காக கனடாவிலிருந்து இலங்கை அல்லது இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இனிமையாக இருக்குமா என்று கேட்டால் அடிக்கவந்து விடுவார்கள் .இலங்கைக்கு அல்லது இந்தியாவுக்கு வருவது இனிமையாக இருக்குமே ஒழிய விமானப்பயணம் இனிமையாக இருக்காது ,கிட்டத்தட்ட ௨௦ மணித்தியாலங்கள் பயணம் என்றால சும்மாவா?

,இனிமையான விமானப்பயனங்களை கற்பனை செய்து வைத்திருக்கும் நாம் இங்கே கிழே பார்க்கும் விமான நிலையங்களுக்கு பயணம் செய்வோமானால் எமது மனநிலை எப்படி இருக்கும்? இந்த விமான நிலையங்களுக்கு  நாம்  கண்டிப்பாக விமானப் பயணம் போகவேண்டிய சூழ்நிலை   ஏறபட்டால் நாம்   போவோமா? மாட்டோமா?

ரிஸ்க் எடுப்பது என்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி என்ற பரம்பரையில் வந்த நாங்கள் ரிஸ்க் எடுத்தே தீருவோம் என்கிறிர்களா? உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்ய நீங்கள் தயாரா?

சரி! கிழே இருக்கும் விடியோக்களை பார்த்துவிட்டு சொல்லுங்களேன்

.

ஒன்றை பார்த்து விட்டீர்கள் இனி அடுத்த வீடியோ .

http://www.youtube.com/watch?v=fLphTxDix-c&feature=related

Wednesday, October 10, 2012

மதவாதிகளின் வெறிச்செயல்! பெண் கல்வியை ஊக்குவித்த 14 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு !!

 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சேர்ந்த ஸ்வாத் பள்ளத்தாக்கு  பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்தவரும், சமாதானத்துக்கான சர்வதேச விருது ஒன்றுக்காக பரிந்துரை செய்யப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இச் சிறுமி தனது சேவையினால் பாகிஸ்தானில் மட்டும் ல்ல ,உலகெங்கிலும் புகழ்பெற்றவர்.

 

இந்நிலையில் சம்பவத்தினை தாமே செய்தோம் என்று இஸ்லாமிய கடும் கோட்பாளர்கள் ஆகிய தலிபான்கள் சொல்லி இருக்கின்றனர் .அவர் ஒரு தலிபான் எதிர்ப்பாளர் மேற்கத்திய ஆதரவாளர் அதனால் தான் சுட்டோம் என்று காரணம் சொல்லிருக்கின்றனர்.அனால் என் இச்சிறுமி சுடப்பட்டார் என்பதன் காரணத்தினை வாய்க்குள் விரலை வைத்திருக்கும் சிறு பிள்ளை கூட சொல்லிவிடும் .

பெண்கள் கல்வி கற்பதனை எதிர்க்கும் தீவிர மத வெறியரான தலிபான்கள் பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும்  சிறுமியை சுட்டதன் பின்ணணி யாருக்கும் விளங்க முடியாது அல்ல .ஏற்கனவே ஆப்கானில் பெண்கள் பள்ளிகளை மூடி,இயங்கும் பள்ளிகளில் விஷம் கலந்து பெண் பள்ளிப் பிளைகளை,ஆசிரியைகளை கொன்று இப்படி பல வழிகளில்  பெண்கள் கல்வியை முடக்கும் தலிபான்கள் பெண்களை முக்காடு இட்டு வீட்டுக்குள்ளே முடக்கவே இதனையும் செய்திருக்கின்றனர்.எனது முன்னைய பதிவு ஓன்றினை பார்க்கவும் மேலதிக தகவல்களுக்கு.

சரி நடந்த சம்பவம் இதுதான்

ஸ்வாத் பகுதியின் முக்கிய நகரமான மின்கோராவில் பள்ளிக்கூடத்திலிருந்து பெண் குழந்தைகள் வாகனம் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கி ஏந்திய தாடி வளர்த்த  மர்ம நபர்கள் வாகனத்தை வழிமறித்து, மலாலா யூஸுஃப்ஸாய் இருக்கிறாரா என்று கேட்டு விட்டு பின்னர் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக பார்த்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.

தலையில் காயம் பட்டுள்ளதாகவும்  , ஆனால் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இச்செயல் பலத்த கண்டனத்தினை எழுப்பியுள்ளதுடன் பலரும் இச்சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்..நாமும் மதவாதிகளால் சுடப்பட்ட இச்சிறுமி பூர்ணகுணமடைய இறைவனை வேண்டுவோம்

மேலாதிக வாசிப்புக்கு சுட்டிகள் :-

http://www.guardian.co.uk/world/2012/oct/09/taliban-pakistan-shoot-girl-malala-yousafzai

http://www.nytimes.com/2012/10/10/world/asia/teen-school-activist-malala-yousafzai-survives-hit-by-pakistani-taliban.html

http://www.facebook.com/malalayousafzaiofficial

Tuesday, October 09, 2012

கேரளா அரசின் ஏயர்-கேரளா ! தமிழக அரசின் எயர்–அம்மா !!

 

தலைப்பை பார்த்து கண்ணை கட்டுதே என்று வடிவேல் பாணியில் புலம்புகிறி ரிகளா?தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம் .இதுவும் நடக்கலாம்.நடக்காது என்று யாரவது சொல்லமுடியுமா? எயர் அம்மா சில வேளைகளில் அம்மாவின் பிறந்த தினத்திலிருந்து  பறக்க தொடங்கினால்  பிளேனின் நிறம் பச்சையாக இருக்கும்  என்பதை மட்டும் என்னால் அடித்து  சொல்லமுடியும்.. விமான பணிபெணகளும் வேறு வழி பச்சைதான் சாரி, பச்சை சாரிதான் அதற்காக பச்சை பச்சையாக வீடியோ எல்லாம் போடுவார்களா என்று கேட்டக் கூடாது ?

சரி விடையம் இதுதான் கேரளா அரசு எயர் -கேரளா என்னும் பெயரில் ஒரு விமான நிறுவனத்தினை அடுத்த ஆண்டு  ,மலையாள புதாண்டுடன் தொடங்க இருக்கிறது .வெளிநாடுகளில் நிறைய மலையாளிகள் வசிப்பதால் தமது விமானத்தில் பறந்தால் அரசுக்கு வருமானம் வரும் என்பதனால் இத்திட்டம்.

நல்லதொரு திட்டம் தான் அனால ஒரு சிக்கல் இந்திய சிவில் விமான போக்குவரத்து  நிறுவனத்தின் விதிப்படி வெளிநாட்டு சேவையில் ஈடுபட என்னும் எந்தவொரு நிறுவனமும் முதல்  ஜந்து ஆண்டுகள் உள்ளூர் சேவையில் ஈடுபடவேண்டும் .அதன்பின்னரே வெளிநாட்டு சேவைக்கு அனுமதி.

அதாவது கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன் எனும் பழமொழி நினைவுக்கு வருகிறதா? முதல் ஜந்து ஆண்டு உள்ளுரில் கேட்டிககாரதனமாக   கோழி மேய்தால் பின்பு வெளியூரில் மேய்க்க அனுமதி .

அனால் கேரளா அரசு ஒரே அடியாக வெளிநாட்டுக்கு சேவைக்கு அடிஎடுக்க் நினைக்கிறது . ஒரு அரசு  இயக்குவதால் தமக்கு அனுமதி கிடைக்கும் என் நம்புகிறார்கள்

சரி மலையாள விமான சேவை என்றபடியால் தமிழ்படங்களில் காட்டப்படும் தோற்றத்தில் விமானப் பணிப்பெண்கள் இருந்து சேவையாற்றுவார்கள் என் நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல !!!!!!!

Neelthamara Photos

பேஸ்புக் பக்கம் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை !

 

 பதினாறு வயது பெண்!, பேஸ்புக் அழைப்பு!! கலவரம் !

பேஸ்புக் இன்றைய நாளில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்படும் இணையத்தளம்.பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவன் கணக்கிலேயே எடுக்கப்படாத காலம்.பேஸ்புக்கினால் நன்மைகளா தீமைகளா அதிகம் விளைகிறது எண்டு பார்த்தால் நன்மைகளும் சரி தீமைகளும் சரி  சரிக்கு சரி சசமாகவே இருக்கிறது.பேஸ்புக் மூலம் பெண்கள் ஏமாற்றம் ,மோசடி ,புரட்டு ,கள்ளக்காதல்,வதந்தி,பணமோசடி இப்படி பல  இன்னோரன்ன சம்பவங்கள் ந்டைபெருவதாகவே பல தகவலகள் காண முடிகிறது.அண்மையில்  நண்பர் இக்பால் செல்வன் பேஸ்புக்கினால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்றைப்பற்றி எழுதியிருந்தார். இது அதற்கு எதிர்மாறானது

சரி நீட்டி முழக்கவில்லை .ஒரு பதினாறு வயது இளம்பெண் தனது . 16வது பிறந்த தினத்துக்கு பேஸ்புக் மூலம்  விடுத்த அழைப்பு கலவரத்துக்கு காரணம் ஆகியது.தனது பிறந்த நாளுக்கு பேஸ்புக் முலமாக இப் பெண்  அழைப்பினை விடுத்தபோது கிட்டத்தட்ட 240,000 பேருக்கு மேற்பட்டோர் அழைப்பினை பெற்றுக்கொண்டனர். 30000 பேர் பார்ட்டிக்கு வருவதாக உறுதிப்படுத்தினர் நெதர்லாந்தினை சேர்ந்த இப்பெண் இவ் அழைப்பானது தனது “உறவினருக்கும் நண்பர்களுக்கும்” மட்டுமானது என்பதனை கூறிப்பிட மறந்ததால் பிறந்த தினத்தன்று ஹாரேன் என்னும் ஊரில் உள்ள இப்பெண்ணின் விட்டிற்கு முன்னால்   கிட்டத்தட்ட5000  பேர் கூடிவிட்டனர் .

Muenster, Germany - May 7, 2011: facebook.com website seen through a blurred keyhole. Photography concept of data privacy issues. Facebook is the biggest social networking website of the world, owned by Facebook, Inc.  Stock Photo - 9475437

தமது மகளின் பிறந்தநாள் விழாவுக்கு இந்தளவில் விருந்தினர்கள் வருகையினைக் கண்ட இப் பெண்ணின் பெற்றோர் வெலவெலத்து போய்விட்டனர் .இது மட்டுப்படுத்த வீட்டு விழா என்பதை செவிமடுக்காத பெரும்பாலும் இளைஞர்களை கொண்ட கூட்டம் எப்படியும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது என்று களம இறங்க வன்முறை வெடித்தது .பியர் போத்தில்களுடன் காணப்பட்ட இளைஞர் கூட்டத்தினால்   கடைகள் சூறையாடப்பட போக்குவரத்து விள் க்குகள் ,மின்விளக்குகள் ,கார் இப்படி பல  சேதமாக்கப்பட கலகம் அடக்கும் போலீசார் 500 பேர் வந்துசேர்ந்தனர் .

பின்னர் இளைஞர் கூட்டம் ஆனது போத்தில்கள்,கற்களை கொண்டு போலீசாருடன் மோதலில் ஈடுபடபோலீசார் பல மணிநேரம் போராட ஒருமாதிரி கலவரம் ஓய்ந்தது .ஆறு பேர் காயமடைந்தனர் ,34 பேர் கைது செய்யப்பட்ட்டனர்.

இது கடந்த வாரம் நெதர்லாந்தில் இடம்பெற்ற சம்பவம் ,இவ்வளவுக்கும் அப்பெண செய்த தவறு தனது  அழைப்பில் பிரைவேட என் குறிப்பிட மறந்துதான் ,சிறிய ஒரு விடையம் எப்படி கலவரம் ஆக மாறியது  பார்த்திரிகளா? “,ஒரு சமுக இணையதளத்தின் சக்தி எந்தளவுக்கு பரந்துவிரிந்துள்ளது பார்த்தீர்களா? அண்மையில் அரபு நாடுகளில் இடம்பெற்ற புரட்சிகள் எப்படி வேகம் பெற்றன என்பது உங்களுக்கு தெரியும் தானே ?

இன்றைய தினம் பத்திரிகைகளில் வாசித்த செய்தி மனிதனின் இன்றைய தேவைகள் எவை என்பன தொடர்பாக

“காலத்துக்கு ஏற்ப மக்களின் விருப்பங்களும் மாறுகின்றன. ஒரு காலத்தில் சினிமா மீது மக்களுக்கு அதிக மோகம் இருந்தது. இப்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். பலருக்கு செக்ஸ், சிகரெட் போன்றவற்றை விட இவையே அதிக ஆசையை தூண்டுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் ஜெர்மனியில் ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 18 முதல் 85 வயது உடையவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மது, சிகரெட், செக்ஸ் மற்றும் பல்வேறு விருப்பங்கள் குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர்களில் பெரும்பாலானோர் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமுதாய வலை தளங்களில் படங்களை பார்ப்பது, படிப்பது, கருத்துகளை எழுதுவது ஆகியவற்றை தவிர்க்கவே முடியவில்லை என்று கூறியுள்ளனர். மது, செக்ஸ் போன்ற எல்லாவற்றையும் விட அதிகமாக தங்களின் ஆசையை தூண்டுவது இவை என்று தெரிவித்துள்ளனர்.”

என்னைப் பொறுத்த வரையில் வலைபதிவையும் இவற்றில் சேர்க்கவேண்டும் என்பேன் .நீங்களும் இதை அமோதிப்பிர்கள் என்பேன் அது கூட ஒரு போதைதான் .(நான் சொல்லவில்லை என் மனைவி )

சரி சொல்லவந்த விடையத்துக்கு வருகிறேன் .எதுவாக இருந்தாலும் பொது வெளியில் உங்கள் கருத்துகள்,எண்ணங்கள் ,அழைப்புகள்.பின்னுட்டங்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ளும் பொது அவதானமாக பதிவிடுவீர்கள் என் நம்புகிறேன் ,நீங்களும் ஒரு கலவரத்துக்கு காரணமாக் இருக்கமாட்டிர்கள் என நம்புகிறேன்

எசகு பிசகாக பேஸ்புக்கில் பதிலளித்து மாட்டிகொண்டுள்ள இன்றைய உதாரணம் சோனியாவின் மருமகன் வதேரா. இவரது பேஸ்புக்கில் பக்கத்தில் தன மீதான ஊழலை விமர்சித்து கருத்திட்ட இவர் நாட்டின் ஜனநாயக அமைப்பினை விமர்சித்ததாக எழுந்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தினை முடக்கிவைத்திருக்கிறார்.  

இதில் இருந்து தெரியும் சேதி .சனி நாக்கில் துள்ளி விளையாடினாலும் கூட.தேவை சாந்தியும் சமாதானமும் உங்கள் நாக்குக்கு மட்டுமல்ல ,முளைக்கு கூட.