Wednesday, November 15, 2006

அம்பலமாகும் இலங்கையின்" பொட்டுக்கேடு"


சர்வதேச ரீதியில் அம்பலமாகும் இலங்கையின் "பொட்டுக்கேடு'!

லங்கை அரசின் அதன் பாதுகாப்புப் படைகளின் "பொட்டுக்கேடு' அம்பலமாகத் தொடங்கிவிட்டது.

அரச பயங்கரவாதத்தின் உள்வீட்டு உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார் ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அலன்றொக். ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட தொடர்பாளர் ராதிகா குமாரசுவாமியின் விசேட பிரதிநிதி யாக இலங்கைக்கு வந்திருந்த அலன் றொக், பத்து நாள்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து நேரடி யாக நிலைமைகளைக் கண்டறிந்த பின்னரே உள்வீட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.

வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் தங் கள் படைக்குத் திரட்டுகின்றார்கள் என்று "ஆடு நனைகிறது எனக் கவலைப்பட்ட ஓநாய்கள்' போல முதலைக் கண்ணீர் வடித்த தென்னிலங்கை, இப்போது "தேள் கொட்டிய திருட னாக' துடிக்கின்றது. வயது குறைந்த தமிழ்ச் சிறுவர்களை விடுதலைப் புலி கள் படைக்குச் சேர்க்கிறார்கள் என்றுதான் இதுவரை குற்றச் சாட்டுக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இலங்கை அரசுப் படைகளோ தனது ஒட்டுப்படையான கருணா குழு மூலம் தமிழ்ச் சிறுவர்களைப் பலவந்தமாக மடக்கிப் பிடித்து, கடத்திச் சென்று, படைக்குச் சேர்க்கின் றன என்ற உண்மையைச் சர்வதேச அமைப்பு இந்த விட யத்தில் உண்மையைக் கண்டறிந்து உலகறியச் செய்யும் தகுதியுடைய ஸ்தாபனம் அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகத் தென்னிலங்கை அரசின் போக்கு எத்தகையது, அதன் உண் மைச் சொரூபம் என்னவென்பவையெல்லாம், அதன் முகமூடி கிழிய இப்போது வரிசையாக அம்பலமாகத் தொடங்கிவிட் டன.

1990 களில் யாழ். நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி அகதிகள் 170 இற்கும் அதிகமானோரை விமானக் குண்டு வீச்சு மூலம் கூண்டோடு கொன்றொழித்துவிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று உண்மையைத் தென்னிலங்கை புதைகுழி தோண்டிப் புதைத் தமை போன்றதல்ல இப்போதைய நிலைமை.

சீருடையினரின் இரும்பு வேலிகளைத் தாண்டி, மறைப்புகளைக் கடந்து, கொடூர நெருக்குவாரங்களை மீறி, உண்மைகளும், நிகழ்வுகளின் மூலங்களும் அம்பலமாகும் நிலைமைக்குத் தொழில் நுட்பமும், வசதிகளும் வளர்ந்துவிட்டன. அதனால், சத்தியத்துக்கு வேலி போட்டு மூடும் தென்னி லங்கை முயற்சி தோற்றுக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களைச் சுற்றி வளைத்து கருணா குழு பிடிப்பதற்கு கிழக்கில் அரச படைகள் எப்படி உதவுகின்றன, எவ்வாறு சிறுவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கின்றன, மடக்கிப் பிடிக்கப்படும் சிறுவர்கள் பல படை முகாம்கள் மற் றும் தடைநிலைகளைத் தாண்டி, பாதுகாப்பான இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு எப்படிக் கொண்டு செல்லப்படுகிறார்கள், அங்கு பலவந்தமாக ஒட்டுப்படைகளில் இணைத்து ஆயுதப் பயிற்சிக்கு உட்படுத் தப்படுகிறார்கள், இத்தகைய அராஜகம் குறித்துச் செய்யப்படும் முறைப்பாடு களை அரசும், அரசுப் படைகளும், பொலிஸும் எவ்வாறு உதாசீனம் செய்கின்றன என்று எல்லா விடயங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் அலன் றொக்.

இந்த விவகாரங்களை நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துத் தாம் முறையிட்டார் எனவும், இது குறித்து முழு அளவில் விசாரணைகளை நடத்தி உண்மை களைக் கண்டறியவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் ஜனாதிபதி உறுதி யளித்தார் என்றும் கூட அலன் றொக் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால், இந்த உறுதி வழக்கங்களில் சர்வதேச சமூகத் துக்கு ஏதோ நம்பிக்கையிருக்குமோ என்னமோ, ஆனால் தமி ழர் தரப்புக்கு நம்பிக்கையே கிஞ்சித்தும் கிடையாது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வி.விக்னேஸ்வரனில் தொடங்கி ரவிராஜ் எம்.பி.படுகொலை வரை பல்வேறு அராஜகங்களுக்கு இவற்றில் பலவற்றுக்குக் குற்றச்சாட்டு விரல் அரசுப் படைகளை நோக்கி நீண்ட நிலையில் இத்தகைய நியாயமான விசாரணைகள் பற்றிய அறிவிப்புகள் ஜனாதிபதி மஹிந்தரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டமையையும் அவற்றினால் ஏற்பட்ட பலன் யாதுமில்லை என்பதை யும் "விசாரணை எனும் மாயமான்' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் இப்பத்தியில் விவரமாக விளக்கியிருந்தோம்.

இந்த விடயத்தில் விசாரணை அறிவிப்புக்கும் அது அப் படியே பொருந்தும். இன்னொரு விடயம். சிறுவர்களைப் பலவந்தமாக மடக் கிப் பிடித்துக் கடத்திச் சென்று ஆயுதப் படையில் சேர்க்கும் இந்தத் திருகுதாளம் தமிழர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. 1988 1989 ஆம் ஆண்டுகளில் "அமைதிப்படை' என்ற பெயரில் இந்தியத் துருப்புகள் ஈழத் தமிழர் தாயகத்தை ஆக் கிரமித்திருந்த சமயத்தில், அந்தப் படைகளுடன் சேர்ந்து வந்த குழுக்களும் கூட இதே மாதிரி அராஜகம் புரிந்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.

இவ்வாறான பலவந்த கட்டாய ஆட்சேர்ப்பும், ஆயுதப்
பயிற்சியும் சண்டை என வரும்போது எவ்வாறு பொல பொலத்து எதிர்ப்பக்கமாகத் திரும்பின என்பதை 1989 நவம் பர், டிசம்பர் மற்றும் 1990 ஜனவரி அனுபவங்கள் மூலம் இலங்கை கண்டறிந்துள்ளது.

அந்தப் பட்டறிவிலிருந்து கற்ற பாடத்தை மறந்து, இராணுவத்தின் சதி வலையில் சிக்கி, அதே "மண் குதிரைத் திட்டத்தை' நம்பிப் போர் எனும் ஆற்றில் இறங்க முயலும் தரப்புகள் ஒன்றுக்கு இரண்டு தடவை இந்த உழுத் துப்போன முயற்சி குறித்து சிந்திப்பது நல்லது.

நன்றி:-யாழ் உதயன் ஆசிரிய தலையங்கம் (14-11-2006)