Friday, August 11, 2006

"ஆனந்தவிகடன் தலையங்கம்"

மிழகத்துக்கு சிங்கள போலீஸ் அதிகாரிகளை அனுப்பிய இந்திய மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "ஆனந்த விகடன்" வார ஏடு தலையங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனந்த விகடன் தலையங்கம் வருமாறு:

சிங்கள போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்தில் அளித்து வந்த பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி, அவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் காட்டிய பலமான எதிர்ப்பின் விளைவே இந்த இடமாறுதல்.
இலங்கை மண்ணில் மோதல்கள் நிகழும் இந்த நேரத்தில்... அந்நாட்டு அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொந்தளிப்பான உணர்வுகள் அலையடிக்கும் இந்த நேரத்தில்... தமிழ் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இப்படியொரு பயிற்சி முகாமுக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையின் ராணுவ நடவடிக்கைக்கு இவர்கள் உதவ மாட்டார்கள். கூட்டங்களில் அமைதியை ஏற்படுத்தவும், பொதுமக்களை அமைதிப்படுத்தவும்தான் இந்தப் பயிற்சி என்று மத்திய அரசு சொல்வது எடுபடாத சமாதானம்!

நல்லது நடக்கும்போதெல்லாம், மத்திய அரசிடம் வலியுறுத்தி இதை நாங்கள்தான் செய்ய வைத்தோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் தமிழக ஆட்சியாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டு எல்லைக்குள் நடந்திருக்கும் இந்த நெருடலான சம்பவத்துக்குச் சொன்ன பதில்... எதிர்ப்புகள் எழுந்திருப்பதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசுக்கு இங்குள்ள உணர்வுகளைத் தெரிவித்து, பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டோம் என்பதே!

இந்தச் சூழ்நிலையில் இப்படியொரு பயிற்சி முகாம் தமிழகத்தில் நடந்திருக்கக் கூடாது என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடு என்றால், எங்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமலே மத்திய அரசு இதை நடத்தியது மிகப் பெரிய தவறு என்று மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா?

மாநில உரிமைகள் பற்றிக் கால காலமாகக் குரல் கொடுப்பவர்கள், இப்போது அதைச் செய்யவில்லையே, ஏன்? என்று ஆனந்த விகடன் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் விமானம் களத்தில்??

புலிகளின் வான்படை விமானம் பலாலி பெரும் தளத்தின் மீது தாக்குதல்?

அந்தா இந்தா என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த பூனை கடைசியில் வெளியே வந்துவிட்டது.ஆம் புலிகளின் விமானப்படை விமானம் ஒன்று பலாலிபெரும் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெற் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையனும் ஏறக்குறைய ஒப்புக்கொண்டுள்ளார்.இருந்தாலும் அரசு படைகளிடம் இருப்பதை போல புலிகளிடம் இருக்கும் விமானங்கள் யுத்த விமானங்களாக இருப்பதற்கு சாத்தியம் இல்லை.அவை இலகு இரக விமானங்களாகவே இருக்கும்.அப்படிதான் வரும் தகவல்களும் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் புத்தியுள்ளவனுக்கு புல்லும் ஆயுதமாகும்.ஆம் சிறிய விமானங்களை வைத்துக்கொண்டு இராணுவத்துக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்த புலிகளால் முடியும் என்பதுடன் சில குறிப்பிட்ட முக்கிய இலக்குகளை தாக்கவும் முடியும்.

இது புலிகளின் கடந்த கால வரலாற்றில் நிருபித்து காட்டப்பட்டுள்ளது.

Thursday, August 10, 2006

யுத்த தர்மம்.

போர் என்றால் வைத்தியசாலைகள்,அதுசார்ந்த அம்பியூலன்ஸ் வண்டிகள்
என்பனவற்றை தாக்கக்கூடாது என்பது ஜ.நா சபையால் வரையப்பட்டு
உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை.

ஆனால் இலங்கையில் ? நேற்றைய தினம் சிறிலங்காவின் இராணுவ ஆழ
ஊடுருவும் படையணி வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில்
தாக்குதல் நடாத்தியிருப்பதோ அம்பியூலன்ஸ் வண்டி மீது.
அதுவும் இவ் அம்பீயூலன்ஸ் வண்டியானது நெடுங்கேணி அரசினர் வைத்தியாலைக்கு சொந்தமான வண்டி.கொல்லப்பட்டவர்களில் ஒருவர்
வைத்தியசாலை டொக்ரர் அவரின் மனைவி,மற்றும் இரு தாதிமார்,சாரதி

வழமைபோலவே தாம் இத்தாக்குதலை நடத்தவில்லை என்று இராணுவம்
மறுக்கலாம். ஜ.நா நடைமுறைகளை மீறுவது இலங்கை படைகளுக்கு
புதிய விடையமுமல்ல.சிங்கத்தின் வழித்தோன்றல்களிடம் மனிதத்தன்மையினை எதிர்பார்ப்பது எமது தவறல்லவா?

Wednesday, August 09, 2006

வரலாற்றில் கறுப்பு பக்கம் - இலங்கை

தொண்டர் அமைப்புகளின் பணி பற்றிய வரலாற்றில் கறுப்புப் பக்கம்

இப்போது மூதூர் நகரில் அரச சார்பற்ற பிரெஞ்சுத் தொண்டு நிறுவ னம் ஒன்றின் சார்பில் பணிபுரிந்த பதினைந்து அப்பாவித் தமிழர் கள் மோசமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய ரீதியில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.............

தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்.

மேலதிக தகவல்களுக்கு:-

http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1155055032&archive=&start_from=&ucat=1&

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19133